ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரியாண்டவர் கோவில் தீமிதி மற்றும் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரியாண்டவர் கோவில் சிவராத்திரி உற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
11 நாட்கள் நடக்கும் உற்சவத்தில், 6ம் தேதி மயான கொள்ளை உற்சவம் நடந்தது.9ம் தேதி மாலை தீமிதி உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் திருக்குளத்தில் இருந்து அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள்வழியாக வந்து தீமித்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் காலை இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 7 மணிக்கு தேரில் எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. 13ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா சந்திர. கோதண்டராமன் மற்றும் அங்காளம்மன் கோவில்தெரு வாசிகள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.