பதிவு செய்த நாள்
12
மார்
2019
01:03
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன், நேற்று நடந்தது. வரும், 23ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலின் நடப்பாண்டிற்கான பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம், மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது. நேற்று, காலை, 6:30 மணிக்கு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.
விழாவில், முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் பங்கேற்றனர். வரும், 23ம் தேதி வரை, தினமும், காலை மற்றும் இரவு நேரத்தில், ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியான கமலத் தேர் திருவிழா, 17ம் தேதியும்,
திருக்கல்யாணம், 18ம் தேதியும் நடக்கிறது.