புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த மயான கொள்ளை உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 42ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மயானக் கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது. பகல் 1:00 மணிக்கு தேர் புறப்பாடு. மாலை 6:00 மணிக்கு நரிமேடு மைதானத்தில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.திரளான பக்தர்கள் காய்கறிகள் மற்றும் நாணயங்களை இறைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.