திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2019 11:03
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காசியை விட வீசம் பெரியது, அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமாக போற்றப்படும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பத்து நாட்கள் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. புஷ்பவனேஸ்வரரும் சவுந்தரநாயகி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கொடி மரம் அருகில் எழுந்தருளினர். பகல்11:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சுப்ரமணிய பட்டர் வகையறாவினர், செந்தில்பட்டர்,அசோக் பட்டர், கண்ணன் பட்டர், ராஜா பட்டர் ஆகியோர் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். பாரம்பரிய சங்குகள் முழங்க கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற வைபவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர். மார்ச் 19ம் தேதி திருக்கல்யாணமும், 20ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.