ராமானுஜர், காஞ்சிப் பெரியவர் சிலைகளுக்கு காவிவஸ்திரம் தான் அணிவிக்க வேண்டுமா? அல்லது வெள்ளை, மஞ்சள் துணிகளையும் அணிவிக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2012 04:03
ராமானுஜர், காஞ்சிப் பெரியவர் போன்றோர் தமக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் உலக மக்களுக்காகத் தொண்டாற்றியவர்கள். இந்து சநாதன தர்மத்தின் அடிப்படையில் மக்களிடையில் ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்கள். மக்கள் நலனுக்காக உலக சுக போகங்களைத் தியாகம் செய்தவர்கள். எளிமையாக வாழ காவி அணிந்த மகான்கள். இவர்களின் சிலைகளுக்கு காவி வஸ்திரம் அணிவித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்தச் சிலைகளைப் பார்க்கும் பொழுது, அவர்கள் செய்த தியாகத்தையும், தொண்டையும் நினைவில் கொண்டு நாமும் முடிந்ததைச் செய்யவும், காவி ஆடையைப் பார்த்து எளிமையாக வாழவும் பழகிக் கொண்டால் மனசாந்திக்கு குறைவிருக்காது.