Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜர், காஞ்சிப் பெரியவர் ... குழந்தைகள் தப்பாக பேசுகிறார்களா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
படியுங்க! படியுங்க! கூச்ச சுபாவம் ஓடியே போயிடும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
04:03

என் குழந்தை நன்றாகப் படிக்கிறான். ஆனால், யாரைக் கண்டாலும் பேச கூசுகிறான். ஐயோ! இவன் இன்டர்வியூவுக்குப் போனால், எப்படி பதில் சொல்லப் போகிறான், என்று வருந்துபவர்கள், மேடைப் பேச்சாளராக திகழ விரும்புபவர்கள், எழுத்துத் துறையில் வெற்றியாளராக வேண்டுவோர், திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்) சிவனை மனதில் எண்ணி இதைப் பாடுங்கள்.

கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினனே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே.

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன், இகபரமும் வண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையோடு சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட, வெண்காடு இடமா விரும்பினேனே.

விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்
மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகு என்று
தடம் மண்டு துறைக்கெண்டை, தாமரையின் பூமறையக்
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

வேலைமலி தண்காணல் வெண் காட்டான் திருவடிக்கீழ்
மாலை வலி வண்சாந்தால் வழிபடு நல் மறையவன்தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று, அடா அஞ்சுவரே.

தண்மதியும் வெய்யுரவும் தாங்கினான், சடையின் உடன்
ஒண்மதிய நுதல் உமை ஓர் கூறு உகந்தான்; உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரை மேல் அசைந்தானும் அடைந்து அயிரா வதம்பணிய
மிக்க அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண்உடை இறையவனே.

பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கரு மஞ்ஞை நடம்ஆட, கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் விரிவண்டு இசைமுரலும் வெண்காடே.

கள்ஆர் செங்கமலத்தான் கடல்கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வரியான்;
வெள்ளானை தவம்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ஆடி உருகாதார் உணர்வுடமை உணரோமே.

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழிபொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிரிமின்; அறிவுடையீர், இது கேள்மின்;
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே.

தண்பொழில் சூழ் சண்பையர் கோன், தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொழி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடியபத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar