நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2019 01:03
நெய்வேலி: நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 11.30 மணியளவில் ரிஷப லக்னத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. என்.எல்.சி.,இந்தியாநிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் தலைமையிலான விழா குழுவினர் கலந்து கொண்டனர். நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்தது. பின்னர், மயில் வாகனம், ரிஷப வாகனம் மற்றும் முத்து ரதத்தில் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது. வரும் 20 ம் தேதி திருத்தேரோட்டம் நடக்க உள்ளது. 21ம் தேதிபங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய உற்சவமான காவடித் திருவிழா நடக்க உள்ளது. 22ம் தேதி வாண வேடிக்கையுடன் தெப்பத்திருவிழா, 23ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைய உள்ளது. ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக அறங்காவலர் மோகன் தலைமையிலான விழாக்குழுவினர் மற்றும் கிராமங்களின் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.