திருப்போரூரில் கிருத்திகை விழா: காவடியுடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2019 01:03
திருப்போரூர்: திருப்போரூரில் மாசி கிருத்திகை விழாவில் காவடிகளுடன் நேற்று பக்தர்கள் குவிந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரசிதிபெற்ற கோவிலாக கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மாசி கிருத்திகை விழா விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு இவ்விழா நேற்று நடந்தது.அதிகாலை 3 :00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் மொட்டை அடித்து சரவண பொய்கையில் நீராடி கந்தனை நீண்ட வரிசையில் நின்று வழிப்பட்டனர்.பிரதான கிருத்திகை ஒட்டி, மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.காவடி மண்டபத்திலிருந்து பல விதமான காவடிகள் புறப்பாடு மாடவீதிகளில் சென்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகுகுத்தியும் வழிப்பட்டனர்.செவ்வாய் கிழமை, சஷ்டி உடன் கிருத்திகை வந்ததால், காஞ்சி, சென்னை மாவட்டம் மட்டும் இன்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.