கோட்டூர்: கோட்டூர் மலையாண்டிபட்டணம், உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவுக்கு கடந்த, 5ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது.இன்று, 13ம் தேதி காலை, 9:30 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. 19ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், 20ம் தேதி மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தல் நடக்கிறது. வரும், 21ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், பூ வளர்த்தல் நடக்கிறது. 22ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல், மதியம் தேரோட்டம் நடக்கிறது. 23ம் தேதி தேர் நிலை நிறுத்தம் மற்றும் பரிவேட்டை; 29ம் தேதி மகா அபிஷேகம் நடக்கிறது.