சரநாராயண பெருமாள் கோவிலில் 16ம் தேதி ஸம்வத்ஸர உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2019 01:03
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் 3ம் ஆண்டு ஸம்வத்ஸரஉற்சவம் வரும் 16ம் தேதி நடக்கிறது. பண்ருட்டி திருவதிகை ேஹமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 16ம் தேதி, 3ம் ஆண்டு ஸம்வத்ஸர உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி,15ம் தேதி மாலை 5:00 மணிக்கு மகாசாந்தி ஹோமம் துவங்குகிறது. 16ம் தேதி காலை 8:00மணிக்கு 2ம் கால மகாசாந்தி ஹோமம், காலை 10:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சரநாராயண பெருமாள் சிறப்பு திருமஞ்சனம், காலை 11:30மணிக்கு மகாபூர்ணாகுதி, கடம்புறப்பாடு நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் சரநாராயணபெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக மாட வீதிபுறப்பாடும், இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.