பதிவு செய்த நாள்
13
மார்
2019
01:03
சென்னை: புல்வேளூர் கைலாசநாதர் கோவில் கல்வெட்டில், அயோத்தி கோவில் பற்றிய குறிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.கல்வெட்டு ஆய்வாளர்,ராசு என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டம், புல்வேளூர், கைலாசநாதர் கோவில் கல்வெட்டுகளை, மத்திய கல்வெட்டு துறையினர், 1923ல், படியெடுத்துள்ளனர்.அது, தென்னிந்திய கல்வெட்டு தொகுதி, 32ல், 41ம் கல்வெட்டாக பதியப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்த போது, திரு அயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவர், அயோத்தி பெருமானடிகள் ஸ்ரீராகவர் என்ற வரிகள் இருந்தன.புல்வேளூர் கைலாசநாதர் கோவில், முதல் பராந்தக சோழனின், 34ம் ஆட்சியாண்டாகிய, 941ல் கட்டப்பட்டது.இதில், ஸ்ரீராகவர் என்பது, ரகு வம்சத்தைச் சேர்ந்த ராமரை குறிக்கிறது. அதாவது, பராந்தக சோழனின் மனைவி ஜெயபுவன சுந்தரிமணியார், 10 கழஞ்சு பொன் கொடுத்து, அயோத்தியில் இருந்த ஸ்ரீராகவருக்கு, திருவிளக்கு வைத்துள்ளார் என்ற செய்தி, இதன் வழியாக வெளிப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.