Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) கார் வாங்கும் யோகம் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) அதிர்ஷ்டவசமாக பணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) அதிர்ஷ்டவசமாக பணம்

பதிவு செய்த நாள்

13 மார்
2019
04:03

பிறர் துன்பத்தில் கைகொடுக்கும் துலாம் ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர்.  புதன் ஏப்.9ல் இருந்து நற்பலன் கொடுப்பார். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். இதனால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் பெருகும்.  

குடும்பத்தில் புதனால் அலைச்சல் இருக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறுசிறு பிரச்னைகள் வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் சுமுகநிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி உண்டு. மார்ச் 22க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேலிடும்.  மார்ச்23,24ல் பெண்களால் நன்மை கிடைக்கும். மார்ச் 19,20ல் விருந்தினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஆனால் மார்ச் 30,31ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஏப்ரல்8க்கு பிறகு தடைபட்ட  திருமணம் கைகூடும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும்.  

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஏப்.8க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகரிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான பலன் பெறுவர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மார்ச் 17,18, ஏப்.13ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். அனாவசிய செலவு இனி இருக்காது. சனி தொழில் விருத்தியை தந்து கொண்டிருப்பார். ராகுவால் பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 22க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். ஆன்மிக சம்பந்தமான வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  ஏப்.3,4,5ல் அதிர்ஷ்டவசமாக பணம் வர வாய்ப்புண்டு. மார்ச் 21,22,25,26,27ல் சந்திரனால் தடை வரலாம். ஏப்.8க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர்.

கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெண்களின் உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆடம்பர வசதிகளை பெற்று வாழ்வர். அரசாங்க வகையில் விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஏப்.1,2ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று நடப்பது நன்மை தரும். கடந்தகாலத்தில் உழைத்ததன் பலனை தற்போது அனுபவிப்பீர்கள். ஏப்.8 க்குப் பிறகு கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.  

விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தை காண்பர். நெல், கோதுமை, கேழ்வரகு,  பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் கொடுக்கும். புதிய சொத்து  வாங்க நல்ல நேரம் கூடி வரும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. ஏப்.8க்குப்பிறகு நல்ல பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம்.

பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  மார்ச் 22க்கு பிறகு  ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. மார்ச் 28,29ல் ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். ஏப்.6,7,8 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

சகோதரர் வழியில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள் ஏப்.8க்கு பிறகு அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். உடல்நிலை சீராக இருக்கும். மார்ச்20க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.

* நல்ல நாள்:  மார்ச் 17, 18, 19, 20, 23, 24, 28, 29 ஏப்.3, 4, 5, 6, 7, 8, 13
* கவன நாள்: ஏப்.9, 10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 9
* நிறம்: சிவப்பு, நீலம்

பரிகாரம்:
*  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
*  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
*  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar