புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம், அங்காளபரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் தெப்பல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. கடந்த 11ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் தெப்பல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அங்குள்ள தெப்பகுளத்தில் அங்காளம்மனுக்கு தெப்பல் உற்சவம் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு மற்றும் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.