பாகூர்: பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாநடந்தது. தவளக்குப்பம் அடுத்துள்ளபூரணாங்குப்பம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலின் மாசி மகோற்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை 6.00மணிக்கு மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழா நடந்தது.