பழநி: வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா, பழநி திரு ஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில், சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு இன்று (மார்ச் 15ல்) காலையில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதல் நடக்கிறது. ஆறாம்நாளான மார்ச் 20ல் இரவு திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம், ஏழாம் நாள் மார்ச் 21ல் மாலை கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.