மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2019 12:03
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள மைதானம் மாரியம்மன் கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலின், 91ம் ஆண்டு குண்டம் விழா, கடந்த, 5ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 12ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 14ல்) காலை சிம்ம வாகனம் உருவம் போட்ட கொடிக்கு தலைமை பூசாரி மோகன்குமார் பூஜை செய்தார்.
பின்பு, 21 அடி கொடிமரத்தில்கொடியேற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தக்கார் மணிகண்டன், செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன், விழாக்குழுவினர் வெள்ளிங்கிரி, பாலன், பூசாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். வருகிற, 19ம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், 20ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.