மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா: பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 11:03
கன்னியாகுமரி:மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜூலு கூறினார்.மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழா வரும் 4ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், கடற்கரை பகுதியில் 6 இடங்களில் காண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். கடற்கரை மற்றும் முக்கிய இடங்களில் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்படுவர். விபத்துகளில் ஏற்பட்டால் இவர்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுவர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக 3 இடங்கள் பார்க்கிங் பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தலாம். திருட்டு, பெண்களை கிண்டல் செய்பவர்களை கண்காணிக்க 5 சுழல் காமிராக்கள் நிறுவப்பட உள்ளது. கோயில், கடற்கரை, கடற்கரை செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் காமிராக்கள் பொறுத்தப்படும். இதற்கு கட்டுப்பாட்டு அறை அமைத்து பொதுமக்கள் கண்காணிக்கப்படுவர். மேலும் 4 தீயணைப்பு வாகனங்களுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்படுவர். மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தீ பரவாமல் தடுக்க உலர்ந்த வேதிபவுடர் கொண்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மூன்று சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக நடந்து வரும் கொலைகள் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே நடந்து வருதாக தெரியவந்துள்ளது. தேரூர் வன ஊழியர் கொலை வழக்கில் மேலும் 9 பேர் பிடிக்கப்பட வேண்டும். அவர்களை பிடிக்கவும் தனிப்படைகள் மைக்கப்பட்டுள்ளது.கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் கடந்த 6 மாதமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார். பேட்டியின் போது ஏ.எஸ்.பி. தர்மராஜ், கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.