வால்பாறையில், சாய்பாபா படம் திறப்பு பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2019 01:03
வால்பாறை:வால்பாறையில், சத்யசாய்பாபா திருஉருவப்படம் திறப்பு விழா நடந்தது.வால்பாறை கக்கன் காலனியில் சத்யசாய் சமிதி செயல்படுகிறது. வாரம்தோறும் வியாழக்கிழமை பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவேல், முத்துசாமி ஆகியோர் தலைமையில் புதிய சாய்பாபா திருஉருவப்படம் திறக்கப்பட்டது. அதன் பின், பாபாவுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சாய்பாபா பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.