பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த, 16ம் தேதி துவங்கியது. கோவில் வளாகத்தில் தினசரி மதியம் திவ்ய பிரபந்த சேவாகாலம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.பிரமோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் (மார்ச்., 17ல்) மாலை பெருமாள், சிம்ம வாகனத்தில் யோகநரசிம்ம அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் முக்கிய வீதிகள் வழியாக பெருமாள் எழுந்தருளினார்.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து இம்மாதம், 25ம் தேதி வரை நடக்கிறது.