திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏடு கொடுக்கும் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2019 11:03
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள் திருவிழாவாக சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் நிகழ்வு நடந்தது.
விழாவையொட்டி காலை விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித் தனியாக புறப்பாடாகி வீதி உலா முடிந்து கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை சிவாச்சார்யார்கள் பெற்று சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர்.