கடலாடி முத்தாலம்மன் கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2019 02:03
கடலாடி:கடலாடியில் நன்குடி வெள்ளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பழமையான முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
முத்தாலம்மன் கோயில் டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோயிலில் நடந்தது. முத்தாலம்மன் கோயில் டிரஸ்ட் தலைவர் ஆர்.வேல்மயில் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வி.நாகபாண்டி முன்னிலை வகித்தார். கோயில் பரம்பரை பூஜகர் கூரியய்யா வரவேற்றார். செயலாளர் எம்.முருகன், பொருளாளர் எஸ்.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் எம்.காமாட்சி, எம்.அழகுபாண்டி, குமரன், குமரேசன், ஜி.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். கோயிலின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
* இங்கு உலக நன்மைக்காக ஒவ்வொரு பவுர்ணமி தோறும் மாலையில் விளக்குபூஜை நடந்துவருகிறது.ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.