பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
பழநி: பழநியில் நாளை (மார்ச்., 21ல்) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு செல்லும் யானைப்பாதை, படிப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கொடுமுடிதீர்த்தக்காவடிக்கு பெயர்பெற்ற பழநி பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு, ஈரோடுமாவட்டம் கொடுமுடியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடியுடன் பழநிக்கு வந்தவண்ணம் உள்னர்.
அவ்வாறுவரும் பக்தர்கள் சரவணப்பொய்கை, பாதவிநாயகர் கோயில்அருகே பால், பன்னீர், மயில்காவடிகள் எடுத்து கிரிவீதியை வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.நாளை (மார்ச்., 21ல்) பங்குனிஉத்திரம் என்பதால் கூட்டநெரிசலை தடுக்க பக்தர்கள் குடமுழுக்கு நினைவு அரங்கம் வழியாக யானைப் பாதையில் மலைக்கோயிலுக்கு செல்லவும், தரிசனம் முடித்த பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க வசதியாக, அவை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். டி.ஐ.ஜி., ஜோசிநிர்மல்குமார் தலைமையில், எஸ்.பி., சக்திவேல் கட்டுப்பாட்டில் 2,500ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக வந்துள்ளனர்.