பதிவு செய்த நாள்
20
மார்
2019
02:03
திருவள்ளூர்: திருவள்ளூர் சுற்றியுள்ள கோவில்களில், நேற்று, (மார்ச்., 19ல்)செவ்வாய்க்கிழமை, ராகு கால பூஜை நடைபெற்றது.
துர்க்கை அம்மனுக்கு, ராகு கால நேரத்தில், மதியம் 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பில் உள்ள மகா வல்லப கணபதி கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில், ராகு கால பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு, பால், தயிர் மஞ்சள் பொடி மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான அம்மன் பக்தர்கள் வழிபட்டனர்.