நெல்லிக்குப்பம் சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2019 04:03
நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது,நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரம் திருவிழா துவங்கியது.
தினமும் சிறப்பு அபிஷேகமும் சுவாமி வீதிஉலாவும் நடந்து வந்தது. நேற்று (மார்ச்., 21ல்) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது .ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தனர். கைலாசநாதர் கோவில் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நடந்தது.