கம்மாபுரம்: பங்குனி உத்திரத்தையொட்டி, கம்மாபுரம் அடுத்த விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவில் தீர்த்தவாரி குளத்தில் நடந்த வேல்முழுக்கு உற்சவத்தை, ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவிலில், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.
முக்கிய நிகழ்வாக விருத்தாசலம் மணிமுக்தாற்றிலிருந்து நேற்று (மார்ச்., 21ல்)காலை 7:00 மணியளவில், காவடி, பால்குடம் சுமந்து வீதியுலாவும், பகல் 12:00 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து, தீர்த்தவாரி குளத்தில், வேல்முழுக்கு உற்சவம் நடந்தது.