பதிவு செய்த நாள்
25
மார்
2019
01:03
குளித்தலை: கீழகுட்டப்பட்டி, பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்., கீழகுட்டப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் (மார்ச்., 23ல்) காலை, கிராம மக்கள் குளித்தலை கடம்பர்கோவில் காவிரியாற்றில் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.
பின்னர், சிவாச்சாரியார்கள் யாகசாலையில் மூன்று கால பூஜைகள் செய்தனர். நேற்று (மார்ச்., 24ல்) காலை, 7:30 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். குளித்தலை சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* இதேபோல் ராஜேந்திரம் பஞ்., கருங்காளப்பள்ளியில் உள்ள கருப்பண்ணன் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய கிராம பொது மக்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் காலை, தண்ணீர்பள்ளி காவிரியாற்றில் புனித நீர் எடுத்து வந்தனர். யாக சாலை பூஜை முடிந்த பின், கோபுர கலசத்தில் நேற்று (மார்ச்., 24ல்) காலை, 9:00 மணியளவில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.