பெண்ணாடம் சேனை தலைவர் சிவசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2019 01:03
பெண்ணாடம்:பங்குனி உத்திர விழாவையொட்டி, பெண்ணாடம் சேனைத்தலைவர் சிவசுப்ர மணியர் மடாலய கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பெண்ணாடம், வள்ளி தேவசேனா சமேத சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் மடாலய கோவிலில், கடந்த 12ம்தேதி பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
கடந்த 22ம் தேதி, இரவு 8:00 மணியளவில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 9:15 மணியளவில் ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் (மார்ச்., 23ல்) இரவு 7:00 மணியளவில் இடும்பன் பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.