கம்மாபுரம்:பங்குனி மாத உத்திர திருவிழாவையொட்டி, கம்மாபுரம் அடுத்த தெற்கிருப்பு கணையப்பர் கோவிலில், இடும்பன் பூஜை நடந்தது.கடந்த 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினசரி, காலை மாலை கணையப்பர் கோவிலுள்ள முருகன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 22ம் தேதி ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் (மார்ச்., 23ல்) காலை முருகன் மற்றும் இடும்பன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 9:00 மணியளவில் இடும்பன் பூஜை நடந்தது.