கோவை : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக(ஐ.ஆர்.சி.டி.சி.,) இணையதளத்தில், முன்பதிவு செய்யும் பயணிகள் ஆன்மிக, சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு ரயில்களில் அழைத்து செல்லப்படுகின்றனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஷீரடி சென்று சாய்பாபா தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக, பிரத்யேக முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு வரலாறு பகுதியில் உள்நுழைந்து, முன்பதிவு செய்யலாம்.விபரங்களுக்கு, 02423 258956, 258963 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.