கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டியில், பகவதியம்மன், கோட்டை கருப்பண சுவாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், கட்டளை வாய்க்கால் கரையில் கரகம் பாலித்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பகவதியம்மன் மற்றும் கோட்டை கருப்பண சுவாமிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 24ல்) ஆற்றில் கரகம் விடுதலோடு விழா நிறைவடைந்தது.