சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் முத்து வடுகநாதர் பங்குனி மாத சஷ்டி பூஜையையொட்டி தாமரை அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சித்தருக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டது. தொடர்ந்து தாமரை இதழ் மேல் சித்தர் அமர்ந்திருப்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமானோர் சித்தரை வழிபட்டு சென்றனர்.