திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2019 12:03
சிவகாசி: சிவகாசி , திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்31 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகாசியில் உள்ளஇக் கோயில் விழாவின் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார். எட்டாம் நாளில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். அன்று அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோயில் முன் வேட்டைக்கு செல்லுதல் நடைபெறும். 9 ம் நாள் விழாவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக அம்மனுக்கு அக்னி சட்டி , கயர் குத்து, முடிக்காணிக்கை, முத்துகாணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை ஆகிய நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கயர்குத்து திருவிழா சிறப்பாக நடைபெறும். 10 ம் நாள் விழாவில் தேரோட்டம் நடக்கிறது. இதே போன்று திருத்தங்கல் எட்டு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவும் 31 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.