பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
11:04
கூடலுார் : மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம், கூடலுார் அருகே, பளியன்குடியில் கொடியேற்றம் நடந்தது.தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில், வரும், 19ல் சித்ரா பவுர்ணமி விழா , மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரிவிழா என, முப்பெரும் விழா நடைபெறுகிறது. விழா நடத்துவது தொடர்பாக, இரு மாநில அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், கம்பத்தில், கடந்த மாதம், 16ல் நடைபெற்றது.
கண்ணகி கோவிலுக்கு, குமுளியிலிருந்து, கேரள வனப்பாதை வழியாக, ஜீப் செல்லும் பாதையும் , கூடலுார் அருகேயுள்ள பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக, 6.6 கிலோ மீட்டர் நடைபாதையும் உள்ளது.கொடியேற்றம்கண்ணகி கோவில் விழாவை முன்னிட்டு, பளியன்குடியில் நேற்று கொடியேற்று விழா நடந்தது. கம்பம் முன்னாள், எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பச்சை மூங்கிலில் கொடிமரம் தயார் செய்து, அதில் கண்ணகியின் உருவம் பொறித்த மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.