பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
02:04
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், 43வது ஆண்டு தேர்த்திருவிழா வரும், 11ம் தேதி துவங்குகிறது.பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், 43வது ஆண்டு தேர்த்திருவிழா நாளை, 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்குகிறது.வரும், 11ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
11ம் தேதி முதல், 18ம் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப்பெருமாள், ஒவ்வொரு நாளும், சிறப்பு அலங்காரம் மற்றும் வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 19ம் தேதி தேரில் ஏளப்பண்ணுதல், வடம்பிடித்தல் நிகழ்ச்சியும்; மாலை, திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும், 20ம் தேதி காலை தீர்த்தவாரியும், மாலையில் துவாதச ஆராதனம், புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 21ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான, ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.