பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
12:04
சாத்துார்: சாத்துார் சிவன் கோவில் தெருவில் கோவிலை சுற்றிலும் கட்டடக்கழிவுகளும், ரோட்டில் தடைக்கற்கள் போல் பெரிய அளவிலான கற்களும் உள்ளன. கோயில் தெப்பக்குளம் அருகில் பழமையான மடப்பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தெப்பக்குளம் பராமரிப்பில்லாமல் புற்கள் முளைத்து சுற்றுச்சுவர்களில் அரச மரங்கள் வளர்ந்து இடியும் நிலையில் உள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தெப்பத்தின் வடக்கு மற்றும் தெற்குபகுதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள், நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை அகற்றுவதுடன் தெப்பத்தை சுற்றி பக்தர்கள் வலம் வரும் வகையில் நடை பாதை அமைக்க வேண்டும். குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க தெப்பத்தை சீரமைத்து தண்ணீர் தேக்கிடவும், கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். சிவன் கோவில் தெருவில் குடிநீர் பற்றாக்குறை போக்க கூடுதல் நேரம் குடிநீர் வினியோகம் செய்யவும்,. தெப்பத்தை திறந்த வெளி சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பது இங்குள்ளோரின் வேண்டுகோளாக உள்ளது.பாதையின் தடையாக கல்சிவன்கோயிலை வலம் வந்து பக்தர்கள் வழிபட தடையாக பாதையில் பாதாளசாக்கடை மூடி போடாமல் பெரியளவிலான சிமென்ட் கற்களை போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர்.
கோயில் சுற்றுச்சுவர் பாழாகும் வகையில் கட்டடத்திற்கு பயன்படுத்தும் சலித்த மணல் மற்றும் பழைய கட்டட இடிபாடுகளைகொட்டி உள்ளனர். இதனால் சுற்றுச்சுவர் பாழாகும் நிலை உள்ளது. 600 ஆண்டுகள் பழமையான கோயிலை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திக், வியாபாரி, சாத்துார்.கால்வாயை சீரமையுங்கதெப்பக்குளத்திற்கு மரிய ஊரணியில் இருந்து மழைநீர் வந்தது. தற்போது வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் மறைந்து விட்டது.
நகராட்சி சார்பில் முக்குராந்தலில் உள்ள கடைகளின் மேற்கூரையில் வழியும் மழைநீர் தெப்பத்திற்கு கொண்டு வர குழாய் பதிக்கப்பட்டது. காலப்போக்கில் மண் மேவி அதுவும் செயல்படாமல் உள்ளது. குழாயை சீரமைத்து மழைநீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பத்தை நிரப்ப வைப்பாற்றில் கிணறு அமைத்து இருந்தனர் அதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை . இவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகரின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் சங்கரேஸ்வரன், தங்க நகை வியாபாரி, சாத்துார். சுவர்களில் விரிசல் சிவன் கோவில் தெப்பம் அருகே பழமையான கோயில் மடப்பள்ளி உள்ளது. சுண்ணாம்பு பூச்சால் கட்டப்பட்டது. மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் விரிசல் விட்டு காணப்படுகிறது. எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோயில் வரும் பக்தர்கள் பாதிக்கப்படலாம். போர்க்கால அடிப்படையில் மடப்பள்ளியை அகற்றி புதியதாக கட்டித்தர வேண்டும். முனியப்பன், தனியார் ஏஜன்சி உரிமையாளர், சாத்துார்.
தெருவிளக்கு வேண்டும்: சிவன் கோயில் தெருவில் அடிக்கடி தெரு விளக்குகள் பழுதடைகின்றன. சரி செய்ய பல நாட்களாகிறது. மாலை நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். வெளிச்சம் குறைவால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கூடுதலான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். தெப்பத்தை சீரமைத்து வண்ண விளக்குகளை பொருத்தி பராமரிப்பதன் மூலம் இப்பகுதியின் அழகு கூடும். இரவு நேரங்களில் தெப்பக்குளம் திறந்த வெளி பாராக மாறுவதும் தடுக்கப்படும். சீனிவாசன், தனியார் நிறுவன ஊழியர், சாத்துார்.