விழுப்புரம்:விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப மகோற்சவத்தையொட்டி, குளத்தில நீர் நிரப்பும் பணி நேற்று (ஏப்., 9ல்)துவங்கியது.விழுப்புரம் திரு.வி.க., வீதியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப மகோற்சவ வைபவத்தின் முதல்நாள் திருவிழா இன்று (ஏப்., 10ல்) தொடங்குகிறது.
தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விமானங்கள் மூலம் சுவாமி வீதியுலா உற்சவம் 11 நாட்கள் நடக்கிறது. 6ம் வைபவமாக வரும் 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு நாளன்று கோவிலில் கருட சேவை காட்சியில் ஆஞ்சநேயருக்கு லட்ச தீப வழிபாடு நடத்தப்படுகிறது. 10ம் நாள் 19ம் தேதி தெப்போற்சவக் காட்சியும், 11ம் நாள் விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.
இதனையொட்டி கோவில் குளத்தில் அங்குள்ள போர்வெல் களிலிருந்து இரு மோட்டார்கள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணிகள் நேற்று துவங்கியது. தொடர்ந்து நீரேற்றும் பணிகள் நடந்து வரும் நிலையில், குளத்தில் தண்ணீர் இன்னும் இரண்டு நாட்களில் நிரப்பப்படும் என தெரிவித்தனர்.