பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
01:04
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று (ஏப்., 10ல்), கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை ஒட்டி, நேற்று முன்தினம் (ஏப்., 9ல்) இரவு, தாழக்கோவிலான பக்தவத்சலேஸ்வரர் கோவில் விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மலை மீது
அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று (ஏப்., 10ல்) காலை, 6:30 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் கொடியேற்றப்பட்டு, சித்திரை பெருவிழா துவங்கியது.
தொடர்ந்து, வேதகிரீஸ்வரர் மலையடிவாரத்திலிருந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடந்தது. அவருடன், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டி
கேஸ்வரர் ஆகியோரும் சென்றனர். இரவு, 9:00 மணிக்கு, புண்ணியகோடி விமானம், பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்தது.முக்கிய விழாவாக, நாளை (ஏப்., 12ல்)காலை, 6:00 மணிக்கு, வெள்ளி அதிகார நந்தி மலைவலம் மற்றும், 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெறும்.