பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
01:04
பந்தலூர்: பந்தலூர் அருகே, உப்பட்டி, செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அருள் பெற்று சென்றனர். நேற்று (ஏப்.,10ல்) காலை, 4:00 மணிக்கு மங்கள இசையும், மூலவருக்கு எண்ணை சார்த்தும் நிகழ்ச்சி நடந்தது. 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, 9:45 மணிக்கு மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, கோபுர
விமானம், மகா கணபதி, செந்தூர் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா குடமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது.குடமுழுக்கு பூஜைகள் ரமேஷ குருக்கள் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா பாலகிருஷ்ணன், தலைவர் செந்தில்வேல், செயலாளர் முருகேசன், பொருளாளர் பொன்மோகன்தாஸ் தலைமையில் கமிட்டியினர் செய்திருந்தனர். விழாவில், உப்பட்டி, அத்திக்குன்னா, புஞ்சைவயல், நெல்லியாளம், சேலக்குன்னா, ஹட்டி,
தொண்டியாளம், பந்தலூர், பொன்னானி, குந்தலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.