வேலப்பர் கோயிலில் பக்தர்களுக்கு குரங்குகள் தொல்லை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 10:03
ஆண்டிபட்டி :வேலப்பர் கோயில் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல பகுதிளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பலர் வந்து செல்கின்றனர். சித்திரை, ஆடி, புரட்டாசி,தை மாதங்களில் நடக்கும் விழாக்கள், அமாவசை, பவுர்ணமி, கார்த்திகை நாட்களில் விஷேச பூஜைகள் நடக்கிறது. மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் சுனை நீரில் குளித்து முருகனை வழிபடுவதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இங்குள்ள குரங்குகள் தொல்லை தருவதாக உள்ளன. கோயில் வளாகப்பகுதியில் உள்ள மின் வயர்கள், விளக்குகளை அடிக்கடி சேதப்படுத்தி விடுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தொல்லை தந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் விட்டு சென்றனர். தற்போது குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் தொல்லையும் கூடி விட்டது. குரங்குகளை பிடித்து தொலை தூர வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.