ராஜபாளையம் :ராஜபாளையம் சொக்கர் கோயில் விழாவை தொடர்ந்து, நேற்று இரவு தெப்பதேரோட்டம் நடந்தது. கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த பிப்.27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாள் விழாவில், தினமம் அம்பாளுடன் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஏழாம் திருநாளான நேற்று முன்தினம் திருக்கல்யாணம் மற்றும் பூப்பல்லக்கு நடந்தது. எட்டாம் நாளான நேற்று இரவு 7 மணிக்கு,கோயில் பின்புறம் உள்ள மானசரோவர் குளத்தில் தெப்பதேரோட்டம் நடந்தது. ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா முன்னிலை வகித்தார். தேரில் அம்பாளுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன், மூன்றுமுறை வலம் வந்தார். ராஜபாளையம் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்ணன் டி.எஸ்.பி., மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன். ராஜபாளையம் தீ அணைப்பு துறை அதிகாரி செபஸ்டியான் தலைமையில் வீரர்களும் பணியில் ஈடுப்பட்டனர்.