தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2019 02:04
தேவகோட்டை:தேவகோட்டை நகர சிவன் கோவிலான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் (ஏப்., 10ல்) கொடியேற்றம்,மாலையில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
பரம்பரை டிரஸ்டிகள் உட்பட ஏராளமானபக்தர்கள் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து தினமும் காலை ,மாலை சிறப்பு அபிஷேகம், சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு பூஜைகள் நடக்கிறது. சுவாமி அம்மன் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவர். 5ம் நாள் ஏப். 14 ல் ரெங்கநாத பெருமாள் எழுந்தருள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. 18 ம் தேதி தேர் வடம் பிடித்தலும், 20 ந்தேதி தெப்ப விழா நடக்க வுள்ளது.