பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
12:04
திருக்கழுக்குன்றம்: நாயன்மார் உற்சவத்தில், அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ததால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், சித்திரை பிரம்மோற்சவ விழா, தற்போது நடக்கிறது. நேற்று (ஏப்., 12ல்) அறுபத்துமூன்று நாயன்மார், மலைவல உற்சவம் நடந்தது. அலங்கார நாயன்மார், கோயில் அமைவிட வேதமலைக்குன்றை சுற்றி வலம் வந்தனர். திருக்கழுக்குன்றம், சுற்றுப்புற பகுதி பக்தர்கள், மலைவலபாதையில், உற்சவ சுவாமியுடன் நடந்து சென்றனர். தற்போதைய தேர்தல் சூழலில், பல்லாயிரம் பேர் திரண்ட உற்சவ பாதை பகுதியில், தி.மு.க - அ.தி.மு.க., கட்சியினர், ஆங்காங்கே கூடினர். தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டளிக்க கூறி, பக்தர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். பக்தர்களோ, சுவாமி உற்சவத்திலுமா, ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய வேண்டும் என, முகம் சுளித்தனர்.