பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
12:04
உடுமலை: உடுமலை, வள்ளியம்மாள் காலனி, காளியம்மன் கோவில், திருவிழாவையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.காளியம்மன் கோவிலில் திருவிழா, கடந்த 2ம்தேதி துவங்கியது.
திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, மாலையில் நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, 9ம்தேதி அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள், 10ம் தேதி காலையில், பக்தர்கள் பூவோடு எடுத்தும், மாலையில், அலகு குத்தியும், வேண்டுதல்களை நிறைவேற்றினர்.நேற்றுமுன்தினம் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மாலையில், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று, காலையில், விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.மதியம், அம்மனுக்கு தீர்த்த அபிஷேகத்துடன், மஞ்சள் நீராடுதல் நிகழ்வும் நடந்தது. மாலையில், குத்துவிளக்கு பூஜை மற்றும் அம்மன் தொட்டில் அலங்கார சிறப்பு பூஜை நடந்தது.