ராஜபாளையம் : ராஜபாளையம் திரவுபதியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவினை முன்னிட்டு நடந்த பூக்குழி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் விழா கடந்த ஏப். 3 ல் கொடியேற்றத்துட் துவங்கியது. இதை முன்னிட்டு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவின் 10 நாட்களும் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா நேற்று மாலை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதி வந்து பூக்குழி திடலை சுற்றி வந்ததை தொடர்ந்து, பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் ஷியாம் , உப தலைவர் சேது, செயலாளர் ரமேஷ், பொருளாளர் சீனிவாசன் செய்திருந்தனர்.