விருதுநகர் : விருதுநகர் அருகே மீசலுார் விலக்கில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சீரடி சாய்பாபா ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை ஸ்ரீ கணபதி ஹோம், ஸ்ரீ சுதர்சனம், ஸ்ரீ லெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ சீரடி சாய்பாபா ஹோமங்கள் நடைபெற்றது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் வாசிக்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. அதை தொடர்ந்து மகா தீபாராதனை ஆரத்தி, அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.