பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் பிரதான தேர் திருவிழா, நாளை (ஏப்., 16ல்) நடைபெறுகிறது.
திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா, கடந்த, 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.வேதகிரீஸ்வரர், வெள்ளி ரிஷப வாகனம், புருஷா மிருக வாகனம், நாகவாகனம், கதலிவிருட்சம் உள்ளிட்ட பல, வாகனங்களில், தினமும் வலம் வருகிறார்.பிரதான ஏழாம் நாள் திருவிழாவான நாளை (ஏப்., 16ல்), தேர் திருவிழா நடைபெறுகிறது.
மாவட்டத்தில், வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தனிச்சிறப்பாக, ஐந்து ரதங்களில், தேர் திருவிழா நடைபெற உள்ளதுவிழாவை ஒட்டி, நாளை (ஏப்., 16ல்) காலை, 5:30 மணிக்கு, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற உள்ளது. பின், அலங்கரிக்கப் பட்ட ஐந்து தேர்களில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வருவர்.செயல் அலுவலர், குமரன் தலைமையிலான குழுவினர், இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.