திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவை தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க, முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்ததது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.