பதிவு செய்த நாள்
16
ஏப்
2019
03:04
உடுமலை:உடுமலை அருகே பூளவாடியில், அன்பிற்பிரியாள் அம்மன், மருதவாணேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நாளை 17ல், நடக்கிறது.
பூளவாடியில், மதுரை வீரன், அன்பிற்பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், அன்பிற்பிரியாள் அம்மன் மருதவாணேஸ்வரர் மற்றும் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் திருக்கல்யாண உற்சவம் நாளை (ஏப்., 17ல்) நடக்கிறது.விழாவையொட்டி, நாளை (ஏப்., 17ல்) காலை, 8:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை நடக்கிறது; காலை, 8:30
மணிக்கு, சீர்வரிசை எடுத்து வருதல், காலை, 10:00 மணிக்கு, மாலை மாற்றுதல், 10:30 மணிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது.
காலை, 11:30 மணிக்கு, தீபாராதனை, மங்கள ஆசீர்வாதம், மங்கள ஆரத்தி, பகல், 12:30 மணிக்கு மகேஸ்வர பூஜை ஆகிய பூஜைகளும் நடக்கிறது.