பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
12:04
மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் திருக்கல்யாண விருந்து இன்று (ஏப்.,17) காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கிறது.
டிரஸ்ட் தலைவர் விவேகானந்தன் கூறியதாவது: டிரஸ்ட் சார்பில் 19 வது ஆண்டு மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி, பொங்கல், பக்கோடா, கற்கண்டு பால் வழங்கப்பட்டது. பக்தர்கள் காய்கறி நறுக்கி கொடுக்கும் சேவையில் பங்கேற்றனர். மத்திய சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதியுடன், உணவு பாதுகாப்பு சட்டப்படி 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தி முறையான அனுமதி பெற்று திருக்கல்யாண விருந்து இன்று காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கிறது. அசோகா அல்வா, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், காய்கறி கூட்டு, ஊறுகாய் ஆகியவற்றை வாழை இலையில் வைத்து குடிநீருடன் வழங்கப்படும். மாட்டுத்தாவணி, பரவை காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கினர். இத்திருப்பணிக்கும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தொடர்பு இல்லை என்றார்.