நெட்டப்பாக்கம்: ஏம்பலம் தேச மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.வில்லியனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள தேச மாரியம்மன் கோவிலில் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.